நகராட்சி ஊழியர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை

6 months ago 18

சென்னை: நகராட்சி ஆணையர்கள் சிலர், நகராட்சி ஊழியர்களை தங்கள் வீட்டு வேலைக்கு பணியமத்துவதாக புகார் வந்துள்ளது. அவ்வாறு நகராட்சி ஆணையர்கள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி நிர்வாக இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
நகராட்சி ஆணையர்கள் தமது குடியிருப்புகளில், நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர்களை வீட்டு வேலைக்கு பணியமர்த்துவதாக தெரிய வருகிறது. எனவே. நகராட்சி ஆணையர்கள் தங்களது குடியிருப்புகளில் நகராட்சி பணியாளர்களை வீட்டுப் பணிக்கு பணியமர்த்தக் கூடாது என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

வருங்காலங்களில் இது போன்ற புகார்கள் வரும் தருவாயில், சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் மீது உரிய விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு நிர்வாக இயக்குநர் கூறியுள்ளார்.

The post நகராட்சி ஊழியர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்தினால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article