தோழியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றதை கிண்டல் செய்த தாய்; 11ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

1 week ago 6

காந்தி நகர்,

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு மகள் (வயது 16), மகன் உள்ளனர். அப்பெண்ணின் மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். கணவனை இழந்த அப்பெண் தனது மகள், மகனுடன் வசித்து வந்தார்.

இதனிடையே, அப்பெண்ணின் மகளான 11ம் வகுப்பு மாணவி கடந்த சில நாட்களாக தனது தோழியை ஸ்கூட்டரில் அழைத்து சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் தாயான அப்பெண் கேள்வி எழுப்பியுள்ளார். உன் தோழியுடன் எப்போதும் என் ஊர் சுற்றிக்கொண்டி இருக்கிறார். உன் தோழிக்கு ஸ்கூட்டர் இல்லையா? அவள் ஏன் எப்போதும் உன்னுடனே இருக்கிறாள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி கிண்டல் செய்துள்ளார்.

இந்நிலையில், தாய் கிண்டல் செய்ததால் மன உளைச்சல் அடைந்த மாணவி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்ற அப்பெண் வீட்டிற்கு திரும்பியபோது அங்கு மகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், தற்கொலை செய்துகொண்ட சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதேவேளை, தற்கொலை செய்வதற்குமுன் தனது தாயாருக்கு அந்த சிறுமி கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் கூறியதாவது, அம்மா, உங்கள் மகள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். நான் போகிறேன். தம்பியை பார்த்துக்கொள்ளுங்கள். லவ் யூ அம்மா' என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Read Entire Article