தோல்வியில் முடிந்த பாக்.டிரோன் தாக்குதல்-ஜம்மு விரைகிறேன்: உமர் அப்துல்லா

8 hours ago 3

ஸ்ரீநகர்,

பயங்கரவாதிகள் மீதான இந்தியாவின் அதிரடி நடவடிக்கையடுத்து, பாகிஸ்தான் அடாவடியாக இந்திய எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்த முயற்சித்துவருகிறது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறலை இந்திய ராணுவம் தனது வான்பாதுகாப்பு அமைப்பு மூலம் வெற்றிகரமாக முறியடித்தது. நேற்று 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலை இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது.

ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஷெல் தாக்குதலையும் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடியை கொடுத்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாநிலங்களில் நேற்று இரவு மின் தடை ஏற்படுத்தப்பட்டது. ஜம்முவில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜம்முவில் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட நிலையில், இன்று அம்மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா, நிலைமையை ஆய்வு செய்ய இருப்பதாக கூறியுள்ளார். தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு செல்லும் புகைப்படத்தையும் அதில் பதிவிட்டு இருக்கிறார். இது குறித்து உமர் அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: -பாகிஸ்தானின் தோல்வி அடைந்த டிரோன் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு மற்றும் பிற பகுதிகளுக்கு சூழலை கண்காணிக்க புறப்பட்டுள்ளேன்" என்று பதிவிட்டு இருக்கிரார்.

Read Entire Article