தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது

3 months ago 24
ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின்ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றதால் அவரை எதிர்கொண்ட செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிக்கின் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது. தொடக்க செட்டில் இரு வீரர்களும் சர்வீஸில் ஆதிக்கம் செலுத்தியதால் யாருக்கும் பிரேக் பாயின்ட் கிடைக்கவில்லை. முதல் செட்டில் கடும் போராட்டத்திற்கு பின்னர் வெற்றி பெற்ற ஜானிக் சின்னர் , இரண்டாவது செட்டையும் வென்று கோப்பையை கைப்பற்றினார். டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஜிம்மி கானர்ஸ் 109 முறையும், ரோஜர் பெடரர் 103 முறையும் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த பட்டியலில் சேர காத்திருந்த நோவாக் ஜோகோவிக்கின் கனவு, தற்போதைய தோல்வியால் தள்ளிப்போனது.
Read Entire Article