தோட்டக்கலை பயிர் சாகுபடியாளர்கள் நடப்பு ரபி பருவத்துக்கு பயிர் காப்பீடு செய்யலாம் கலெக்டர் அழைப்பு

4 hours ago 2

 

திருச்சி, நவ.23: திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; திருச்சி மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், இயற்கை இடா்பாடுகளான வறட்சி, வௌ்ளம் மற்றும் மகசூல் இழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெற, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் காப்பீடு செய்வது அவசியம். திருச்சி மாவட்டத்தில் நடப்பு 2024 ரபி சிறப்பு பருவத்தில் மண்ணச்சநல்லூர், முசிறி, புள்ளம்பாடி, தா.பேட்டை, தொட்டியம், துறையூர் மற்றும் உப்பிலியபுரம் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் வெங்காயம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வது நல்லது. 2024ம் ஆண்டு ரபி சிறப்பு பருவ வெங்காயம் சாகுபடியாளர்கள் வரும் நவ.30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு ஒரு ஏக்கருக்கு ₹2 ஆயிரத்து 63 பிரிமீயத்தொகையை அரசு பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக செலுத்தி பதிவு செய்துக்கொள்ள வேண்டும். இப்பயிர்க்காப்பீடு பதிவு செய்திட நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கிக்கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், பதிவு செய்யும் விவசாயியின் பெயா் மற்றும் விலாசம், நிலப்பரப்பு அளவு, சா்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சாியாக குறிப்பிட்டு பதிவு செய்து, உரிய காப்பீட்டுத்தொகையை செலுத்திட வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொிவித்துள்ளார்.

The post தோட்டக்கலை பயிர் சாகுபடியாளர்கள் நடப்பு ரபி பருவத்துக்கு பயிர் காப்பீடு செய்யலாம் கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article