காசநோய் கண்டறிதல் முகாம் 150 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை

3 months ago 10

 

ஈரோடு,பிப்.7: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட கேசரிமங்கலம் பஞ்சாயத்து குப்பிச்சிபாளையம், கேசரிமங்கலத்தில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நேற்று நடைபெற்றது.

இதில், காசநோய் பரவல், நுரையீரல் காசநோய் அறிகுறி, நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் சிகிச்சை காலத்தில் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை, ஊட்டச்சத்து உணவு, டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள், எலிக்காய்ச்சல் குறித்து பொதுமக்களிடத்தில் விளக்கப்பட்டது.

மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், திட்ட ஒரங்கிணைப்பாளர் சுதன் சர்மா, மேற்பார்வையாளர் விஜயசேகர், ஜெகதேஷ்குமார், ஸ்ரீநாத் உட்பட பலர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில் பங்கேற்ற, 150 பேருக்கும் நெஞ்சக ஊடுகதிர் பட பரிசோதனை, சளி பரிசோதனை செய்து, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

The post காசநோய் கண்டறிதல் முகாம் 150 பேருக்கு எக்ஸ்ரே பரிசோதனை appeared first on Dinakaran.

Read Entire Article