தங்கும் விடுதியாக மாற்ற முயன்ற பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு சீல்

3 hours ago 1

 

கோபி,பிப்.7: கோபி அருகே உள்ள நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் கடந்த 2 ஆண்டுக்கு முன் 50க்கும் மேற்பட்ட புதிய கடைகளுடன் புனரமைக்கப்பட்டது.இதில் முதல் மாடியில் உள்ள 4 கடைகளை நம்பியூரை சேர்ந்த பிரபு என்பவர் வணிக பயன்பாட்டிற்காக ஏலம் எடுத்தார்.இதன்பின் பேரூராட்சி அனுமதியின்றி கடை சுவர்களை இடித்து தங்கும் விடுதி அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

பள்ளி,கல்லூரி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் இரவில் பஸ் ஸ்டாண்ட் வரும் போது, அங்கு தங்கும் விடுதி செயல்பட்டால் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்படும் என்று பொதுமக்கள் புகார் கூறினர்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பேரூராட்சி துணைத்தலைவர் தீபா தமிழ்ச்செல்வன்,கவுன்சிலர்கள், காங்கிரசார் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து பணிகளை தடுத்து நிறுத்திய பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜன், கடைகளுக்கு சீல் வைத்தார்.மேலும் ஏலதாரர் பிரபு மீது நம்பியூர் போலீசில் புகார் அளித்தார். கடை ஏலதாரர் மீது செயல் அலுவலர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post தங்கும் விடுதியாக மாற்ற முயன்ற பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.

Read Entire Article