பழங்குடியினருக்கு மாடு வாங்க நிதி உதவி

2 hours ago 2

 

சத்தியமங்கலம், பிப்.7: தாளவாடி வட்டாரம் ஆசனூர் மற்றும் திம்பம் மலைப்பகுதியில் உள்ள இட்டரை, தடசலட்டி,காளிதிம்பம், மாவள்ளம், தேவர் நத்தம், சோகி தொட்டி, புதுக்காடு, புது தொட்டி கிராமங்களில் மலை வாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் உள்ள 35 பழங்குடியின பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ரீடு தொண்டு நிறுவனம் சார்பில் கறவை எருமை மாடு வாங்குவதற்கு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது.

ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.36 ஆயிரம் காசோலையாக நிதி உதவியினை ரீடு இயக்குனர் கருப்புசாமி வழங்கினார்.35 பயனாளிகளுக்கு ரூ.12.60 லட்சம் நிதி வழங்கப்பட்டது. இந்த நிதியினை பயன்படுத்தி பழங்குடியின மக்கள் எருமை மாடுகளை வளர்த்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் வழங்கப்பட்டதாக தொண்டு நிறுவனத்தினர் தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட அலுவலர் சரவணகுமார் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post பழங்குடியினருக்கு மாடு வாங்க நிதி உதவி appeared first on Dinakaran.

Read Entire Article