மதுரை, பிப். 15: மதுரை அரசு மருத்துவமனை உதவி பணி தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை, அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள திருவள்ளுவர் சிலை முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கு 8 மணிநேர வேலை வழங்க வேண்டும். அனைவருக்கும் மாதந்தோறும் சம்பள ரசீது வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு வார விடுமுறை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
The post தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.