சென்னை: உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
மே 18 ஆம் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு தினம் தமிழகம் முழுவதும் அனுசரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.