கரூர், மார்ச். 28: கரூர் மாவட்டம் க. பரமத்தி ஒன்றியம் தொட்டியப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போக்சோ சட்டம் குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் தொட்டியப்பட்டியில் ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பள்ளி வளாகத்தில், போக்சோ சட்டம் 2012 குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தென்னிலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தர்மலிங்கம் கலந்து கொண்டு போக்சோ சட்டம் மற்றும் காவல் நிலைய செயலி குறித்தும் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசினார். இநத நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மூர்த்தி செய்திருந்தார், அனைத்து மாணவ, மாணவிகளும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
The post தொட்டியப்பட்டி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.