கனவு உலகத்தில் உள்ள விஜய் களத்திலேயே இல்லை: தமிழிசை கலாய்

1 day ago 3

சென்னை: கனவு உலகத்தில் உள்ள விஜய் களத்திலேயே இல்லை என்று தமிழிசை தெரிவித்து உள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: பாஜ இரண்டாவது மூன்றாவது நான்காவது இடத்தில் உள்ளது என ஏளனமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2026 உங்கள் கூட்டணி கட்சிகள் இரண்டு மூன்றாக பிரிந்து விடும் போலிருக்கிறது. விஜய் ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என எதுகை மோனையில் சொல்வது சரியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் எதிரிலேயே இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஜெயலலிதாவும் சரி, எம்ஜிஆரும் சரி கட்சியில் அடிப்படையில் மக்களுக்காக தீவிரமாக பணியாற்றி தான் முன்னால் வந்தார்கள். ஆனால் விஜய் அவராகவே இமேஜின் (கனவு உலகம்) செய்து கொண்டு பேசுகிறார். தம்பி விஜய் அவர்களே எதுகை, மோனைக்கு வேண்டுமானால் நீங்கள் பேசுவது சரியாக இருக்கும். களத்தில் விஜய் எதிரில் இல்லை. விஜய்யின் பேச்சில் தெளிவற்ற தன்மை தான் உள்ளது.விஜய்யின் படத்திற்கு பல மொழி வேண்டும். ஆனால் பாடத்திற்கு பல மொழிகள் கூடாதா?. பாஜவில் 6 ஆண்டுகள் மாநிலத் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்த ஒருவர், குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தலைவர் பதவிக்கு வர முடியும். அண்ணாமலை கட்சிக்காக உழைத்து கொண்டிருக்கிறார். செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எனக்கு எதுவும் தெரியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

The post கனவு உலகத்தில் உள்ள விஜய் களத்திலேயே இல்லை: தமிழிசை கலாய் appeared first on Dinakaran.

Read Entire Article