சென்னை: இந்தி, சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக மாவட்டந்தோறும் மாணவர்களை திரட்டி கருத்தரங்கு நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக துணை ெபாதுச்செயலாளர் ஆ.ராசா எம்பி தலைமை வகித்தார். அமைச்சர் மு.ெப.சாமிநாதன் முன்னிலை வகித்தார். மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் மாணவர் அணி எப்படி செயல்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, ‘மொழியும், கல்வியும் விழி என காக்கும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி, மாணவர்களை வானளாவ உயர்த்தும், மடிக்கணினி திட்டம் தந்த மாணவர்நேசருக்கு நன்றி.
கல்வி தொகையை நிறுத்திய ஒன்றிய அரசுக்கு கண்டனம், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதோடு பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை அறிவிக்க வேண்டும். இல்லந்தோறும் மாணவர் அணி இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக மாவட்டந்தோறும் மாணவர்களை திரட்டி கருத்தரங்குகள் நடத்தப்படும். 2026 சட்டமன்றத் தேர்தலில், 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார் திமுக தலைவர். அந்த இலக்கை நிறைவேற்றுவோம் என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாணவர்களை திரட்டி மாவட்டந்தோறும் கருத்தரங்கு: திமுக மாணவர் அணி தீர்மானம் appeared first on Dinakaran.