தொடர்மழை காரணமாக தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை சீரமைக்கும் பணியில் தொய்வு

2 months ago 14

தரங்கம்பாடி, டிச.19: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டை சீரமைக்கும் பணி தொடர் மழை காரணமாக பாதிப்படைந்துள்ளது. தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டை சீரமைக்கும் பணி ரூ.3 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. சீரமைக்கும் பணி தொன்மை மாறாமல் செய்யப்பட்டு வருகிறது. டேனிஷ் கோட்டை சீரமைக்கும் பணியை கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு செய்தார். அதை தொடர்ந்து கடந்த 1 மாதமாக தொடர் மழை பெய்து வருவதால் சீரமைக்கும் பணியை தொடரமுடியாமல் தொழிலாளர்கள் திணறினர். அப்பணியில் ஈடுபட்டிருந்த வடஇந்திய தொழிலாளார்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். மழையும் நின்றபாடில்லை அதனால் டேனிஷ் கோட்டை சீரமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ரூ.4 கோடியே 35 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபெறும் கவர்னர் மாளிகை சீரமைக்கும் பணியும் பாதிப்படைந்துள்ளது.

The post தொடர்மழை காரணமாக தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை சீரமைக்கும் பணியில் தொய்வு appeared first on Dinakaran.

Read Entire Article