தொடர் விடுமுறையால் களை கட்டிய கன்னியாகுமரி இன்று வெறிச்சோடியது

3 months ago 15

கன்னியாகுமரி: தொடர் விடுமுறை நிறைவடைந்ததன் காரணமாக கன்னியாகுமரியில் இன்று சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் காலையில் சூரிய உதயம், மாலையில் அஸ்தமனத்தை பார்த்து ரசிக்கின்றனர்.

இதுதவிர கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்வையிட ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்படுகின்றன. இதற்கிடையே நவராத்திரி, சரஸ்வதி, ஆயுதபூஜை என்று தொடர் விடுமுறை காரணமாக கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பின்னர் அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப்பார்த்தனர். இந்தநிலையில் இன்று நவராத்திரி உள்ளிட்ட பூஜை விடுமுறைகள் முடிந்து வழக்கம்போல் மக்கள் அன்றாட பணிகளுக்கு சென்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக களைகட்டிய கன்னியாகுமரியில் இன்று காலை சுற்றுலா பயணிகளை அதிக அளவில் பார்க்க முடியவில்லை. அதன்படி இன்று காலை சூரிய உதயத்தை காண குறைந்த எண்ணிக்கையிலேயே சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மேலும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலகமும் சுற்றுலா பயணிகள் கூட்டமின்றி காணப்பட்டது. ஆங்காங்கே சுற்றுலா பயணிகள் நின்றதையும், கடைகளுக்கு சென்றதையும் பார்க்க முடிந்தது. இதனால் கடைகளில் வியாபாரமும் டல் அடித்தது.

The post தொடர் விடுமுறையால் களை கட்டிய கன்னியாகுமரி இன்று வெறிச்சோடியது appeared first on Dinakaran.

Read Entire Article