சென்னை : தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மதுரை சந்திப்பில் இருந்து பிப். 11,12 ஆகிய தேதிகளில் பழனிக்கு சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்பட உள்ளது. மதுரை சந்திப்பில் பிப். 11, 12-ம் தேதி காலை 8.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் 11.30 மணிக்கு பழனி சென்று சேரும். மறுமார்க்கத்தில் பழனியில் இருந்து பிப். 11, 12 தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு ரயில் புறப்பட்டு மதுரைக்கு செல்லும்.
The post தைப்பூசத்தை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!! appeared first on Dinakaran.