![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/10/38791247-11.webp)
கடலூர்,
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபையில் 154-வது தைப்பூச ஜோதி தரிசன விழா இன்று நடக்கிறது. இந்த ஜோதி தரிசனத்தை காண உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலம், நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். இந்நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் நிலையில், சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதன் விவரம் வருமாறு:-
விழுப்புரத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் -06147) விருத்தாசலத்திற்கு 9.55 மணிக்கும், ஊ.மங்கலத்திற்கு காலை 10.21 மணிக்கும், நெய்வேலிக்கு 10.27 மணிக்கும், வடலூருக்கு 10.37 மணிக்கும், குறிஞ்சிப்பாடிக்கு 10.47 மணிக்கும், கடலூர் துறைமுகத்திற்கு 11.15 மணிக்கும் வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் கடலூர் துறைமுகத்தில் இருந்து மதியம் 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06132) குறிஞ்சிப்பாடிக்கு 12.09 மணிக்கும், வடலூருக்கு 12.18 மணிக்கும், நெய்வேலிக்கு 12.29 மணிக்கும், ஊ.மங்கலத்திற்கு மதியம் 12.38 மணிக்கும், விருத்தாசலத்திற்கு மதியம் 1 மணிக்கும் சென்றடைகிறது.
இதேபோல் விருத்தாசலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்-06133) ஊ.மங்கலத்திற்கு மதியம் 2.20 மணிக்கும், நெய்வேலிக்கு 2.28 மணிக்கும், வடலூருக்கு 2.37 மணிக்கும், குறிஞ்சிப்பாடிக்கு 2.49 மணிக்கும், கடலூர் துறைமுகத்திற்கு மாலை 3.10 மணிக்கும் வந்தடைகிறது.
மறுமார்க்கத்தில் கடலூர் துறைமுகத்தில் இருந்து சிறப்பு ரெயில் (வண்டி எண் 06148) மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு குறிஞ்சிப்பாடிக்கு 3.39 மணிக்கும், வடலூருக்கு 3.47 மணிக்கும், நெய்வேலிக்கு 3.59 மணிக்கும், ஊ.மங்கலத்திற்கு மாலை 4.08 மணிக்கும், விருத்தாசலத்திற்கு 4.30 மணிக்கும், விழுப்புரத்துக்கு மாலை 5.40 மணிக்கும் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் 8 பெட்டிகள் கொண்ட முன்பதிவில்லாத ரெயில்களாக இயக்கப்படுகிறது.