மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியுடன் இணைந்த நட்சத்திர வீராங்கனை

5 hours ago 2

பெங்களூரு,

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் வரும் 14-ம் தேதி தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீராங்கனை ஆஸ்திரேலியாவை சேர்ந்த எல்லிஸ் பெர்ரி நேற்று வரை அணியினருடன் இணையவில்ல. இங்கிலாந்துக்கு எதிரான மகளிர் ஆஷஸ் டெஸ்டின்போது காயம் ஏற்பட்டதால் இவர் பங்கேற்பதில் சிக்கல் நிலவியது.

இந்நிலையில் எல்லிஸ் பெர்ரி இன்று பெங்களூரு அணியினருடன் இணைந்துள்ளார். இதனை அணி நிர்வாகம் வீடியோவாக வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

' , ! Ellyse Perry arrives match ready for #WPL2025. This is Royal Challenge presents RCB Shorts.#PlayBold #ನಮ್ಮRCB #SheIsBold pic.twitter.com/hzv1A1LwGZ

— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 11, 2025
Read Entire Article