தேவரியம்பாக்கம் கிராமத்தில் புத்தர் சிலை கண்டுபிடிப்பு: 900 ஆண்டுகால பழமையானது என ஆய்வாளர்கள் தகவல்

2 weeks ago 2

காஞ்சிபுரம்: தேவரி​யம்​பாக்கம் கிராமத்​தில் 900 ஆண்டுகள் பழமையான அரிய புத்தர் சிலை கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. பெரு​மாள் கோயி​லில் இருந்த இந்த சிலை 900 ஆண்டு பழமை​யானது என வரலாற்று ஆய்வாளர்கள் தெரி​வித்​துள்ளனர். வாலாஜாபாத் அருகே உள்ள தேவரி​யம்​பாக்​கத்​தில் வெண்மை நிற பளிங்​குக் கல்லால் ஆன அமர்ந்த நிலை​யில் உள்ள புத்​தரின் சிலை பெரு​மாள் கோயி​லில் பழைய பொருட்கள் ஓரம் கட்டி வைக்​கப்​பட்ட இடத்​தில் இருந்​தது.

இந்தச் சிலை​யில் உள்ள புத்​தரின் கண்கள் மூடிய நிலை​யில்தியானத்​தில் உள்ளவாறு அமைக்​கப்​பட்​டிருந்தன.ஓரடி உயரமுள்ள இச்சிலை​யில் காதுகள் இரண்​டும்தோள்வரை நீண்​டுள்ளன. மூக்கு சற்று சேதமடைந்த நிலை​யிலும் சுருள் சுருளான தலைமுடி​யுட​னும், இடப்புறத் தோள்​பட்டை முதல் இடுப்பு வரை ஆடையுட​னும், பின்புற மேலாடை நேர்த்தி​யாகத் தெரி​யும் வகையிலும் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

Read Entire Article