தேவனாம்பட்டினம் முகத் துவாரத்தில் 32 எருமைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு..!!

10 hours ago 1

கடலூர்: தேவனாம்பட்டினம் முகத் துவாரத்தில் 32 எருமைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. மழை நீரானது கடலூர் கெடிலம் ஆற்றில் இறங்கியதால் வெள்ளநீர் ஊருக்குள் புகாதவாறு கடலூரில் முகத்துவாரம் கட்டப்பட்டது.கடலூர் பகுதியை சேர்ந்த கேசவன், கண்ணையன், குணா, மனோகர், உள்ளிட்ட 7 பேரினுடைய 60க்கும் மேற்பட்ட மாடுகள் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.

அப்போது முகத்துவாரத்தின் ஆழம் தெரியாமல் இரங்கி 32 மாடுகளும் கடலில் அடித்து செல்லப்பட்டது.இது குறித்து உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஒவ்வொரு மாடும் சுமார் ரூ.50,000 முதல் ரூ.60,000 வரை மதிப்புள்ளதாகவும் தெரிவித்தனர். கடலூரில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது மாடுகள் அடித்து செல்லப்பட்ட காட்சிகள் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

The post தேவனாம்பட்டினம் முகத் துவாரத்தில் 32 எருமைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article