தேர்வு நிலை நகராட்சியான பெரம்பலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? அசைக்க முடியாத நம்பிக்கையில் பொதுமக்கள்

3 months ago 24

பெரம்பலூர், செப். 30: தற்போது தேர்வு நிலை நகராட்சி அந்தஸ்து கொண்ட பெரம்பலூர் நகராட்சி, மாநிலத்தின் மையத்தில் உள்ள மிகச் சிறிய மாவட்டத்தின் தலைநகராக விளங்கி வருகிறது. பேரூராட்சியாக இருந்து இடையில் சிற்றுராட்சியாக மாறி, மீண்டும் பேரூராட்சியாகி, பின்னர் கடந்த 2006 ம் ஆண்டு நகராட்சியாக உருவெடுத்தது தான் பெரம்பலூர். பெரம்பலூர் நகராட்சி தற்போது பெரம்பலூர், துறைமங்க லம், அரணாரை ஆகிய 3 பிரதான பகுதிகளைக் கொண்டு, 21 வார்டுகளாக அமைந்துள்ளது இந்தத் தேர்வு நிலை நகராட்சி.

பொதுவாக ஒரு நகராட்சி மக்கள் தொகை மற்றும் வருவாய் அடிப்படையில் முதல் நிலை நகராட்சியாக மாறி, பின்னர்தேர்வு நிலை நகராட்சியாகி, அடுது சிறப்பு நிலை நகராட்சி யாக மாறி, பின்னர்தான் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் பெரம்பலூர் நகராட்சி முதல் நிலை நகராட்சியாக அறிவிக்கப் படாமலேயே, மக்கள் தொகை, வருவாய் அடிப்படையில் தானாகவே தரம் உயர்ந்து, கடந்த 2023 ம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாக அறிவிக்கப் பட்டது. தற்போது அதே பாணியில் மக்கள்தொகை எண்ணிக்கை, வருவாய் மற்றும் அருகாமையில் உள்ள ஊராட்சிகளை இணைத்து பரப்பளவிலும் பெரிதாகி சிறப்பு நிலை நகராட்சியாக அறிவிக்கப் படாமலேயே மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படி 49,648 பேர்களைக் கொண்டதாக 20.59 சதுர கிலோமீட்டர் பரப்பளவுகளைக் கொண்ட தாக அமைந்துள்ளது. இந்த தேர்வுநிலை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான முன்னேற்பாடு பணிகளாக, அருகில் உள்ள கோனேரி பாளையம், எளம்பலூர் ஊராட்சிகளை முழுமையாகவும், கவுல் பாளையம், நொச்சியம் ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளையும் பெரம்ப லூர் நகராட்சியோடு இணைக்க, கடந்த ஆண்டு நகராட்சிகள் நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகியவற்றுடன் கலெக்டர் கற்பகம் தலை மையில் நடந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இருந்தும் இதற்காக தமிழக அரசிடம் இருந்து பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்திற்கு இதுவரை கடிதம் கேட்கப்படாத நிலையில், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகமும் இதுவரை தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப் படாத நிலையில், நேற்று (29ம்தேதி) சமூக வலை தளங்களில் தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல், நகராட்சிகளுடன் இணைக்கப்பட உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல், புதிதாக தோற்றுவிக்கப்பட உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுடன் இணைக் கப்பட உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பட்டியல் whatsapp மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியாகி பெரம்பலூர் நகராட்சியில் பரபரப்பினை ஏற்படுத்தி யுள்ளது.

பெரம்பலூர் நகராட்சியை பொறுத்த வரை 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49648 பேர்கள் வசிப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்தாலும், 13 ஆண்டுகள் கடந்த நிலையில் பல்வேறு தொழில்கள் ரீதியாக, பணிகள் ரீதியாக, நகர வாழ்க்கையின் மீதுள்ள மோகத்தின் காரணமாக நகராட்சியில் குடியேறி யவர்களின் எண்ணிக்கை, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் எனக் கணக்கிட் டுப் பார்த்தால் ஏறக் குறைய 90 ஆயிரம் பேர் இங்கு வசிப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படியே 25 ஆயிரம் குடியிருப்புகள் உள்ள நிலையில், ஒரு வீட்டிற்கு மூன்று பேர் என கணக்கிட்டாலும் 75 ஆயிரம் பேர்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரம்பலூர் நகராட்சியில் தற்போது வரை வீட்டு வரி, தொழில் வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அனைத்து வரு வாய் தொகையினையும் கணக்கிட்டால் நகராட்சி யின் ஆண்டு வருமானம் 15 கோடியாக உள்ளது. இது 20 கோடியாக இருந்தால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படலாம். ஏற்க னவே வருவாய் மற்றும் மக்கள் தொகை அடிப்ப டையில் முதல் நிலை நக ராட்சியாக அறிவிக்கப்ப டாமலேயே நேரடியாக தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு விட்டது.

தற்போது பெரம்பலூர் நகராட்சியில், எளம்பலூர் கோனேரி பாளையம் ஊராட்சிகள் மற்றும் கவுல் பாளையம், நொச்சியம் ஊராட்சிகளில் குறிப்பிட்ட பகுதிகளை சேர்க்கும் பட்சத்தில் ஊராட்சிகளின் மூலம் மட்டுமே 18 ஆயிரம் பேர் நகராட்சியுடன் இணைக்கப்படுவார்கள். இதன்படி 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக் கெடுப்பின்படியே 68,502 பேர்களுடன், 85.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக இருக்கும். ஆனால் 2024 ம் ஆண்டு வரை பெரம்பலூர் நகராட் சியில் வசிக்கும் மக்கள் தொகையைக் கணக் கெடுப்பு செய்தால், பெரம்பலூர் நகராட்சியில் மட்டுமே ஏறக்குறைய 90 ஆயிரம் பேர் வசிப்பார்கள் என நகராட்சி நிர்வாகமே கணக்கெடுத்துள்ளது. இதன்படி பார்த்தால் பெரம்பலூர் நகராட்சி மற்றும் அதனுடன் இணை யும் 4 ஊராட்சிகளின் மக் கள் தொகையை தற்போது சேர்த்து கணக்கிட்டால் கிட்டத்தட்ட 1.5லட்சம் பேர் வசிக்கும் தேர்வு நிலை நகராட்சியாக இருக்கும்.

பெரம்பலூர் நகராட்சி யோடு மேற்கண்ட ஊராட் சிகள் இணைக்கப்பட்டு விட்டால், உடனடியாக சிறப்பு நிலை நகராட்சி அந்தஸ்தை பெற்றுவிடும். ஆனால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட வேண் டும் என்றால்,அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகம் அரசு நிர்வாகத் திடம் பரிந்துரைத்து அதற் காக கூடுதல் அக்கறை காட்டினால் மட்டுமே மாநக ராட்சியாக தரம் உயரும் எனக் கூறப்படுகிறது.

மாநகராட்சியின் ஆண்டு வருமானம் 25 கோடியாக வும், மக்கள் தொகை 2 லட்சம் ஆகவும் இருக்க வேண்டும் என்பது விதி முறை. இருந்தும் மக்கள் தொகை எண்ணிக்கையை பொருத்தமட்டில் மாநகராட் சிக்கான விதிமுறை தளர்த் தப்பட்டுள்ளது. வருமானம் மட்டும் 25 கோடியை எட்ட வேண்டும் என்றால் பெரம் பலூர் நகராட்சியின் தெற்கேவுள்ள சிறுவாச்சூர் ஊராட்சியையும் இணைத் தால் தொழில்வரி, சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்டவை ஒன்று சேர்ந்து தானாக பெரம்ப லூர் நகராட்சியை தரம் உயர்த்தி மாநகராட்சியாக மாற்றிவிடும் என்கிற பிர தான கருத்தும் அதிகாரி கள் மட்டத்தில் பேசப்படுகி றது. அனைத்தும் நிறை வேற அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் மனது வைக்க வேண்டும். மனது வைத்தால் மாநிலத் தின் மையத்தில் உள்ள பெரம்பலூர் விரைவில் மாநகராட்சியாக தரம் உய ரும் என்பது அசைக்க முடி யாத நம்பிக்கையாக உள்ளது.

The post தேர்வு நிலை நகராட்சியான பெரம்பலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா? அசைக்க முடியாத நம்பிக்கையில் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Read Entire Article