குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கம்பிசோலை பகுதியில் உள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில், நேற்று முன்தினம் தேயிலை பறிக்க 6 தொழிலாளர்கள் சென்றனர். அப்போது தேயிலை எடை போடும் இரும்பு கம்பியில் மர்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் நிர்வாணத்துடன் வாலிபர் சடலம் தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலின் பேரில் அருவங்காடு போலீசார் விரைந்து வந்து மோப்பநாய் உதவியுடன் விசாரித்தனர். அப்போது அருகில் கிடந்த அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டையை எடுத்து பார்த்தனர்.
அதில், லஷாசுரன் (39), ஜார்கண்ட் மாநிலம் என்ற முகவரி இருந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில், லஷாசூரன் ஒரு பெண்ணுடன் தேயிலை தோட்டத்திற்கு வந்தது தெரியவந்தது. அந்த பெண் யார்?, எங்கு வசித்து வந்தார்? எதற்காக தேயிலை எஸ்டேட்டுக்கு வந்தார்? லஷாசுரன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post தேயிலை எஸ்டேட்டில் நிர்வாண நிலையில் ஆண் சடலம்: உடன் வந்த பெண் யார்? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.