தேனி பைபாஸ் சாலை திட்டம் விரைவில் மின்கம்பங்கள் இடமாற்றம்

2 weeks ago 2

 

மதுரை, ஜன. 21: மதுரை – தேனி பைபாஸ் சாலை திட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் கோபுரங்கள் இடமாற்றம் செய்ய மின்வாரிய அனுமதிக்காக நெடுஞ்சாலைத்துறை காத்திருக்கிறது. ராமேஸ்வரம் முதல் கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை – தேனி மார்க்கத்தில் உசிலம்பட்டி முதல் நாகமலை புதுக்கோட்டை வரையில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கப்பட்டுள்ளது. நாகமலை புதுக்கோட்டை துவங்கி முடக்குச் சாலை சந்திப்பு வரை, விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதிகளில் நில ஆர்ஜிதம் பணிகள் முழுமையடையவில்லை.

இந்த தடத்தில் ரூ.260 கோடியில் புதிதாக பைபாஸ் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தற்போது வரை ஆயிரம் மீட்டர் தூரத்திற்கு தடுப்புச் சுவர் கட்டும் பணிகள் முடிந்துள்ள நிலையில், 30க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் 4 உயர்மின்கோபுரங்களை இடமாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

மின்கோபுரங்களை இடமாற்றம் செய்வதற்கு ரூ.9.40 லட்சம் வரை திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, மின்வாரியத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது. கோபுரங்கள் மற்றும் மின்கம்பங்களை இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலைத்துறை தரப்பில், மின்வாரியத்திடம் அனுமதி கோரி கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதையடுத்து, விரைவில் மின்சார வாரியம் தரப்பில் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தேனி பைபாஸ் சாலை திட்டம் விரைவில் மின்கம்பங்கள் இடமாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article