டெல்லி: அரசியல்சாசன பிரிவு 200ன் கீழ் முடிவெடுக்கும் நிலை வரும் போது ஆளுநர் மாறுபட்ட நிலையை எடுக்கிறார் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் போது ஆளுநர் உதவி, ஆலோசனையைப் பெறுகிறாரா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப்பட்டால், ஆளுநர் அதன் மீது தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மாறாக, குடியரசு தலைவர் ஒன்றிய அமைச்சரவை ஆலோசனையை பெற்றே முடிவெடுக்க முடியும். எனவேதான் முடிவு எடுப்பது என்பது “aid and advice” அடிப்படையில் என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post அரசியல்சாசன பிரிவு 200ன் கீழ் முடிவெடுக்கும் நிலை வரும் போது ஆளுநர் மாறுபட்ட நிலையை எடுக்கிறார்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்! appeared first on Dinakaran.