
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
எல்லை நிர்ணயம் என்பது தமிழ்நாட்டைப் பற்றியது மட்டுமல்ல - இது தென்னிந்தியா முழுவதையும் பாதிக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க வெற்றிகரமாக நடவடிக்கை எடுத்த மாநிலங்களை தண்டிக்கக்கூடாது.
தேசிய வளர்ச்சிக்கு சிறப்பான பங்களிப்பைத் தந்த மாநிலங்களை வஞ்சிக்கக்கூடாது.
உண்மையான கூட்டாட்சியை நிலைநிறுத்தும் நியாயமான, வெளிப்படையான மற்றும் சமமான அணுகுமுறை நமக்குத் தேவை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.