
ராஞ்சி,
தேசிய மகளிர் ஆக்கி தொடர் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் ஒடிசா, மராட்டியம், மத்திய பிரதேசம், மணிப்பூர், அரியானா, மிசோரம், ஜார்கண்ட் மற்றும் பெங்கால் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.
2-வது நாளான நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஒடிசா 1-0 என்ற கோல் கணக்கில் மராட்டியத்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. மற்ற ஆட்டங்களில் மத்திய பிரதேசத்தை வீழ்த்தி மணிப்பூர் அணியும், மிசோரமை வீழ்த்தி அரியானாவும், பெங்காலை வீழ்த்தி ஜார்கண்ட் அணியும் வெற்றி பெற்றன.