சென்னை: கூடுதலாக ஒரு ஏ.சி. மின்சார ரெயில் சேவை - தெற்கு ரெயில்வே திட்டம்

4 hours ago 1

சென்னை,

சென்னையில் நாள் தோறும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். புறநகர் பகுதிகளை இணைப்பதில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்கு வகிக்கிறது. கொளுத்தும் வெயிலை சமாளிக்க கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த 19-ந்தேதி ஏ.சி. மின்சார ரெயில் சேவை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இந்த ரெயிலில் குறைந்தது ரூ.35-ம், அதிகபட்சம் ரூ.105-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ஏ.சி.மின்சார ரெயில் சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏ.சி. மின்சார ரெயில் சேவை நாள் தோறும் 3 வேளைகளில் மட்டுமே இயக்கப்பட்டது. பின்னர், பயணிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தற்போது ஒரு நாளைக்கு 8 வேளைகள் அதிகரித்து இயக்கப்பட்டு வருகிறது.

இதேபோல, பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) நடப்பாண்டு 10 ஏ.சி. மின்சார ரெயில்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், ஒரு ரெயில் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதாக இயக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஏ.சி. மின்சார ரெயில் சேவையை ஆரம்பத்தில் பொதுமக்கள் குறைந்த அளவே பயன்படுத்தி வந்தனர். ஆனால், சேவை எண்ணிக்கையை அதிகரித்த பின்னர் தற்போது நாள்தோறும் 2 ஆயிரத்து 500 பேர் வரையில் பயன்படுத்துகிறார்கள். இந்த எண்ணிக்கை வரக்கூடிய நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மேலும் ஒரு ஏ.சி. மின்சார ரெயில் சேவையை இயக்குவது மற்றும் கட்டணம் குறைப்பு குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article