புதுடெல்லியில் உள்ள தேசிய நோய் எதிர்ப்பாற்றல் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன. எம்எஸ்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1. ஸ்டாப் சயின்டிஸ்ட்- III: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வயது: 40க்குள். தகுதி: 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் எம்எஸ்சி அல்லது 60% தேர்ச்சியுடன் எம்.டெக்.,/எம்டி/எம்விஎஸ்சி/எம்.பார்ம்/ எம்.பயோடெக் மற்றும் 4 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் அல்லது பி.ஹெச்டியுடன் 4 ஆண்டுகள் அனுபவம். வயது: 40க்குள்.
2. ஸ்டாப் சயின்டிஸ்ட்- IV: 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-2). தகுதி: 60% மதிப்பெண் தேர்ச்சியுடன் எம்எஸ்சி மற்றும் 9 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது 60% மதிப்பெண்களுடன் எம்.டெக்.,/எம்டி/எம்விஎஸ்சி/ எம்.பார்ம்/எம்.பயோடெக் மற்றும் 8 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் அல்லது பி.ஹெச்டி மற்றும் 8 ஆண்டுகள் முன்அனுபவம்.www.nii,res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.05.2025.
The post தேசிய நோய் எதிர்ப்பாற்றல் நிறுவனத்தில் சயின்டிஸ்ட் appeared first on Dinakaran.