தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க. இணைந்ததில் மகிழ்ச்சி - பிரதமர் மோடி

1 week ago 4

புதுடெல்லி

பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபட்டு, வலுவாக பாடுவோம். 

தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அ.தி.மு.க.  இணைந்ததில் மகிழ்ச்சி. எங்கள் மற்ற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து, தமிழ்நாட்டை முன்னேற்றத்தின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வோம், மாநிலத்திற்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வோம். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றும் ஒரு அரசாங்கத்தை நாங்கள் உறுதி செய்வோம்.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், தமிழ் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாக்கவும், ஊழல் மற்றும் பிளவுபடுத்தும் தி.மு.க.வை விரைவில் வேரோடு பிடுங்குவது முக்கியம், அதை எங்கள் கூட்டணி செய்யும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Stronger together, united towards Tamil Nadu's progress!

Glad that AIADMK joins the NDA family. Together, with our other NDA partners, we will take Tamil Nadu to new heights of progress and serve the state diligently. We will ensure a government that fulfils the vision of the…

— Narendra Modi (@narendramodi) April 11, 2025


Read Entire Article