ஐ.பி.எல். 2025: பஞ்சாப் அணிக்கு 96 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

17 hours ago 2

மும்பை,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்படும் சமயத்தில் மழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை நின்றதையடுத்து சுமார் 2 மணிநேரம் தாமதாக டாஸ் போடப்பட்டது. இந்த ஆட்டம் 14 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி ஒரு ரன்னிலும், பிலிப் சால்ட் 4 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் ரஜத் படிதார் 23 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டிம் டேவிட் நிலைத்து நின்று அதிரடி காட்டினார். 26 பந்துகளில் 50 ரன்கள் விளாசி இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இறுதியில் பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியில் சாஹல், மார்க்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளும், சேவியர் பார்லெட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து 96 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. 

Read Entire Article