பஞ்ச்குலா: அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில், 15வது தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள அணிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்தப்பட்டன. அதன் முடிவில் ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பெங்கால், மிசோரம், அரியானா, பஞ்சாப் அணிகள் முன்னிலை பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றன. இந்த அணிகள் இடையே நடந்த போட்டிகளில், ம.பி.,யை ஜார்க்கண்ட், கர்நாடகாவை மகாராஷ்டிரா, பெங்காலை மிசோரம், பஞ்சாபை அரியானா அணிகள் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
The post தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா அரை இறுதிக்கு தகுதி; மிசோரம், அரியானாவும் முன்னேற்றம் appeared first on Dinakaran.