தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி போட்டி இன்று தொடக்கம்

3 hours ago 1

புதுடெல்லி,

தேசிய சீனியர் பெண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டி அரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் இன்று தொடங்கி 12-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டியில் பங்கேற்கும் அணிகள் 'ஏ', 'பி', 'சி' என்று மூன்று டிவிசனாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' டிவிசனில் அரியானா, ஒடிசா, கர்நாடகா, மராட்டியம், மணிப்பூர், பஞ்சாப், ஜார்கண்ட், மிசோரம், தமிழ்நாடு, மத்தியபிரதேசம், பெங்கால், உத்தரபிரதேசம் ஆகிய அணிகளும், 'பி' டிவிசனில் தெலுங்கானா, உத்தரகாண்ட், அசாம், ராஜஸ்தான், பீகார், டெல்லி, சத்தீஷ்கார், சண்டிகார், இமாச்சலபிரதேசம் அணிகளும், 'சி' டிவிசனில் கேரளா, டையூ டாமன், குஜராத், ஆந்திரா, புதுச்சேரி, அருணாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் அணிகளும் இடம் பெற்றுள்ளன.


Read Entire Article