
சென்னை,
இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர். சீதா ராமம், ஹாய் நானா, லஸ்ட் ஸ்டோரீஸ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். . இவர் தற்போது ஷானியல் டியோ இயக்கத்தில், 'டகோயிட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். சுப்ரியா யர்லகடா மற்றும் சுனில் நரங் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார்.
அதிவி சேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் இணைந்திருக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழு இதனை அறிவித்துள்ளது.
அனுராக் காஷ்யப் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "மகாராஜா" படத்தில் முக்கிய வில்லனாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.