
தனுசு
தனுசு ராசி அன்பர்களே!
மற்றவர்களின் தேவையை குறிப்பறிந்து உதவும் தயாள மனம் கொண்டவர் நீங்கள். வலக்கை செய்ததை இடக்கைக்கு அறியாவண்ணம் பார்த்துக் கொள்ளும் தன்னலம் அற்றவர் நீங்கள்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஒரு சேமிப்பு தொகையாவது போட்டு வைப்பது நல்லது.
வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதியதொரு தொழிலை துவங்க அரசு கடன் கிடைக்கும்.
குடும்பத் தலைவிகளுக்கு கணவரது முழு சம்பளமும் தங்களுக்கு கைக்கு வரும். தங்களுடைய குடும்ப நிர்வாகம் மேம்படும். தங்கள் அறிவுரையை கணவர் கேட்டு நடப்பார். இளம் பெண்களுக்கு விரும்பிய வாரே நல்ல துணை கிடைக்கும்.
கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனம் தேவை.. அதிக பேச்சைக் குறைப்பது நல்லது.
மாணவர்களுக்கு தனக்கு புரிந்து கொள்ள முடியாத பாடத்தை ஆசிரியரிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறப்படையும்.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று மஞ்சள் வஸ்திரத்தை குருபகவானுக்கு சாத்தி வருவது தடைகளை உடைக்கச் செய்யும்.
மகரம்
நீங்கள் உங்கள் வாழ்வில் எதிரிகளை கூட மன்னித்து விடுவீர்கள். ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் சுமைகள் அதிகரிக்கும். அதனை திட்டமிட்டு முடித்து விடுவீர்.
வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது.
குடும்பத் தலைவிகளுக்கு புதியதொரு தொழில் வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வர். பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பர்.
கலைஞர்களுக்கு தங்கள் படம் பல கோடியை தாண்டும் அளவிற்கு அதிக லாபத்தை பெறுவர்.
மாணவர்களுக்கு பகுதி நேர வேலையில் ஈடுபடுவர். பெற்றோர்களுக்கு உதவியும் புரிவர். இடுப்பு கை கால்களில் வலி வந்து நீங்கும்.
பரிகாரம்
ஐயப்பனை சனிக்கிழமை அன்று சென்று வழிபடுவது மிக நன்று.
கும்பம்
நீங்கள் உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, செல்வந்தர், நண்பர், பகைவர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் உதவும் குணம் உங்களுக்கு உண்டு.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு புதிய வாகனம்வாங்கும் எண்ணம் தோன்றும். வங்கி கடன் மூலம் வாங்கி விடுவீர்கள்.
வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய கிளைகளை மேம்படுத்துவர்.
குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கங்கள் அதிகரிக்கும். வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்வர். மாமியார் மருமகள் உறவு சுமூகமாக செல்லும்.
கலைஞர்களுக்கு திரை உலகத்திற்கு தங்கள் பாதம் பதியும் படி சாதனைப் படைப்பர்.
மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தனது அன்றைய பாடங்களை படித்து விடுவர். பாதத்தில் வலி வந்து போகும்.
பரிகாரம்
பிள்ளையாருக்கு அருகம்புல்லை ஞாயிறு அன்று சாற்றுவது நல்லது.
மீனம்
மீன ராசி அன்பர்களே!
நீங்கள் அதிர்ஷ்டம் வரவில்லையே என்று வருத்தப்படுபவர் இல்லை. மாறாக, முன்னேறுவதற்கு உண்டான வாய்ப்புகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமிக்கவர்.
சிறப்புப்பலன்கள்
உத்யோகஸ்தர்களுக்கு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. வாய் நிதானம் தேவை.
வியாபாரிகளுக்கு சொந்த தொழில் செய்பவர்களுக்கு இருப்பதை வைத்து தொழிலை மேம்படுத்தவும்.
குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை ஏற்படும். தங்கள் பிள்ளைகளின் உதவியால் பண பிரச்சினை நீங்கும். சகோதர சகோதரி உறவு மேம்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும்.
கலைஞர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த கம்பெனியிலிருந்து அழைப்பு வரும்.
மாணவ மணிகளுக்கு தங்கள் கடின உழைப்பினால் நல்ல மதிப்பெண்களை பெறுவர். இரவில் அதிக நேரம் விழிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்
வியாழக்கிழமை அன்று குரு ஸ்தலமான திருச்செந்தூர் முருகரை மனதார நினைத்துக் கொண்டு காரியங்களை துவங்குங்கள். அல்லது அருகில் உள்ள முருகப் பகவான் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் மாலையை சாத்துவது நல்லது.
கணித்தவர்:
திருமதி. N.ஞானரதம்
Cell 9381090389