தேசிய சட்ட சேவைகள் ஆணைய தலைவராக நீதிபதி சூர்ய காந்த் நியமனம்

5 hours ago 2

புதுடெல்லி: தேசிய சட்ட சேவைகள் ஆணைய தலைவர் பதவிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய சட்ட சேவைகள் ஆணைய தலைவராக நீதிபதி பி.ஆர்.கவாய் தற்போது பொறுப்பு வகித்து வருகிறார். மரபுப்படி உச்ச நீதிமன்றத்தின் இவர் வரும் 14ம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்க உள்ளார். இதையடுத்து காலியாக உள்ள அந்த பதவிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்ய காந்த் பெயரை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பரிந்துரைத்துள்ளார். இந்த அறிவிப்பை சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் கடந்த 9ம் தேதி(நேற்று முன்தினம்) வௌியிட்டது. இந்த நியமனம் வரும் 14ம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தேசிய சட்ட சேவைகள் ஆணைய தலைவராக நீதிபதி சூர்ய காந்த் நியமனம் appeared first on Dinakaran.

Read Entire Article