தேசப்பற்று இல்லாதவர்கள் பாகிஸ்தான் செல்லுங்கள் - நயினார் நாகேந்திரன்

6 hours ago 2

திருப்பூர்,

திருப்பூரில், பா.ஜ.க. சார்பில் ஆபரேசன் சிந்தூர் வெற்றிப் பேரணி நடைபெற்றது.. பேரணியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது;

காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்தது விபத்து அல்ல. அது பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி. ஒரு தீவிரவாதியின் செயலால் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் நாம் பழி சொல்ல முடியாது. ஒன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த சமூகத்தில் இந்து, இஸ்லாமியர்கள் இடையே மிக பெரிய பூகம்பத்தை உருவாக்கிவிட்டு பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கம் போய் இருக்கிறது.

பிரதமர் மோடி 12 நாட்கள் விரதம் இருப்பது போல் இருந்து, எப்படி பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும், ஆபரேஷனில் பாகிஸ்தானில் உள்ள ஒரு பொதுமக்கள் கூட பாதிக்கப்படக்கூடாது என்ற உணர்வோடு ஆபரேஷன் சிந்தூர் என்று பெயர் வைத்தார்.

பிரதமர் மோடியை பொறுத்த வரை அன்புக்கு அன்பு, ரத்தத்திற்கு ரத்தம், பழிக்குப்பழி வாங்கியே தீரவேண்டும் என்பதற்காக நம்முடைய தேசத்தை இழந்துவிட முடியுமா? அதற்காக தான் 100 கிமீ. தாண்டி பாகிஸ்தானின் லாகூரிலும், ராவல்பிண்டியிலும் விமான தளத்தை எல்லாம் நொறுக்கினார்கள். பயங்கரவாதத்தையும், அதை யாரெல்லாம் ஆதரிக்கிறார்களோ அத்தனை பேரையும் அடித்து நொறுக்குவேன் என்பதற்காக தான், பிரதமர் நாடு நாடாக சென்றார்.

தேச உணர்வோடு இருங்கள், இல்லையென்றால் எல்லோரும் பாகிஸ்தானுக்கு போய்விடுங்கள். அவ்வளவுதான், வேற ஒண்ணும் இல்லை. பாகிஸ்தானை பற்றி தெரியுமா உங்களுக்கு? ஆந்திராவில் காங்கிரஸ் முதல்வர் பாகிஸ்தானை அழித்தே ஆக வேண்டும் என்கிறார். ஆனால் இங்குள்ள முதல்வர் என்ன சொல்றார்? எந்த விதமான பதிலும் இல்லை.

இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார். 

Read Entire Article