சென்னை: தொப்புள் கொடி வெட்டிய விவகாரத்தில் சிக்கிய யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டார். சென்னையை சேர்ந்த யூடியூபரான இர்பான் ஆசிபா தம்பதிக்கு, கடந்த ஜூலை மாதம் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போது, அறுவை சிகிச்சை அறையில், மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை இர்பான் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோ சர்ச்சையான நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ ஊரக நல பணிகள்துறை தெரிவித்திருந்தது. அதன்படி, மருத்துவ ஊரக நல பணிகள் துறை இணை இயக்குனர் செம்மஞ்சேரி போலீசில் புகார் அளித்துள்ளார்.
அத்துடன் டாக்டர் நிவேதிதா மருத்துவ பணி செய்ய தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரசவம் பார்த்த தனியார் மருத்துவமனைக்கு ரூ.50,000 அபராதம் விதித்து 10 நாட்களுக்கு மருத்துவமனை இயங்க தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் யூடியூபர் இர்பான் கடிதம் வாயிலாக மன்னிப்பு கோரியுள்ளார். இர்பான் வெளிநாட்டில் இருப்பதால் உதவியாளர் மூலமாக தனது தரப்பு வருத்தத்தை கடிதத்தின் மூலமாக தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவ ஊரக நலப் பணிகள் இயக்குனர் ராஜமூர்த்தியிடம் கடிதம் சமர்ப்பித்துள்ளார். அந்த கடிதத்தில் எந்த உள்நோக்கத்துடனும் வீடியோ பதிவு செய்யவில்லை என்றும் மருத்துவ சட்டங்களை மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
The post தொப்புள் கொடி வெட்டிய விவகாரம் யூடியூபர் இர்பான் கடிதம் வாயிலாக மன்னிப்பு appeared first on Dinakaran.