வந்தவாசி, பிப்.24: வந்தவாசி அடுத்த தெள்ளார் மத்திய ஒன்றிய திமுக சார்பில் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தெள்ளார் பஜார் வீதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராதா தலைமை தாங்கினார். முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ராமு, ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கோபிநாதன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் காமராஜ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், இந்தியை திணிக்கும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் இந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில், விவசாய அணி ஒன்றிய அமைப்பாளர் பட்டாபிராமன், சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணைத்தலைவர் விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், ஒன்றிய துணைச்செயலாளர் துரைமுருகன், இளைஞர் அணி ஒன்றிய அமைப்பாளர்கள் சுரேஷ், முருகன், தகவல் தொழில்நுட்ப பணி ஒன்றிய அமைப்பாளர் அருண், மோகன் மற்றும் கலந்து கொண்டனர்.
The post தெள்ளார் ஒன்றிய திமுக சார்பில் இந்தி திணிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.