
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
உலகெங்கும் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுவோரும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் மக்களாலும் யுகாதி என்கிற தெலுங்கு புத்தாண்டு மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட்டு வருகிறது.
வசந்த காலத்தின் முதல் நாளை யுகாதி என்ற பெயரில் புதுவருடமாக தெலுங்கு மக்களும், கன்னட மக்களும் இந்நாளை சிறப்புடன் கொண்டாடி மகிழ்கின்றனர். வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த யுகாதி திருநாள் வாழ்வில் வளர்ச்சியும், மகிழ்ச்சியும் பெற்றுத் தரும் என்பது பொதுவான நம்பிக்கையாகும். இந்நாளில் மக்கள் தங்களது வாழ்வில் புது முயற்சிகளையும், தொழில்களையும் தொடங்கி அதனால் ஏற்றம் பெறுகிறார்கள்.
தெலுங்கு, கன்னட மொழிகளுக்கு ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு 2008-ம் ஆண்டில் செம்மொழி தகுதியை அளித்து பெருமைப்படுத்தியதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.
நாட்டில் பல்வேறு மொழி, கலாச்சாரம் என்றிருந்தாலும், இந்தியர் என்ற சகோதர மனப்பான்மையோடு அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து சாதி, மத துவேஷம் நீங்கி தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் அனைத்து மக்களும் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் யுகாதி பண்டிகை நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.