தெலுங்கில் 'மதகஜராஜா' படத்தின் வசூல் விவரம்

3 months ago 13

சென்னை,

விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் மதகஜராஜா. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, நிதில் சத்யா, சோனு சூட் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு உருவான இப்படம் 12 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 12-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. நடிகர்கள் விஷால், சந்தானம், மனோபாலா, ஆகியோரின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் கவனம் பெற்றது. மேலும் விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் வெளியான இப்படம் சுமார் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.

தமிழில் வரவேற்பை பெற்ற இப்படம் தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 31-ந் தேதி வெளியானது. ஆனால், எதிர்பார்த்தபடி தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெறல்லை.

தெலுங்கில் 'மதகஜராஜா' படம் வெளியாகி ஒரு வாரம் முடிவடைந்துள்ள நிலையில், பாக்ஸ் ஆபீஸ் வசூல் விவரம் வெளிவந்துள்ளது. அதன்படி இப்படம் இதுவரை ரு.1 கோடி வசூலை கூட தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Read Entire Article