தெலுங்கானாவில் கார் கவிழ்ந்து கோர விபத்து - 7 பேர் பரிதாப பலி

3 months ago 22

மேடக்,

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் சிவம்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், மரத்தில் மோதி, ஏரியில் கவிழ்ந்த விபத்தில் சிக்கி 4 சிறார்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உறவினர் ஒருவரின் சுப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காரில் சொந்த ஊருக்கு திரும்பும் போது இந்த கோர விபத்து நடந்துள்ளதுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் காரை ஓட்டிச் சென்ற நபர் மட்டுமே காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார், மீதமுள்ள ஏழு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் போலீசார் அளித்த தகவல்படி, ஓட்டுநர் அந்த காரை அதிவேகமாக ஓட்டிச் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர கல்மீது மோதி, அருகில் இருந்த ஓடையில் விழுந்தது. இந்த கோர சம்பவத்தில் தல்லாபள்ளி தாண்டா பகுதியைச் சேர்ந்த தனவத சிவராம் (55) மற்றும் அவரது மனைவி துர்கம்மா (45), மாலோத் அனிதா, அவரது மகள்கள் பிந்து (14), ஸ்ரவாணி (12), ஜெகயா தாண்டாவைச் சேர்ந்த குகுலோத் சாந்தி (45) மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article