எனது உணவில் ஆண்டுக்கு 300 நாட்கள் இது இருக்கும்... பிரதமர் மோடி பேச்சு

3 hours ago 1

பாட்னா,

பீகாரில், பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் 19-வது தவணையாக விவசாயிகளுக்கு நிதியை விடுவிக்கும் நிகழ்வு இன்று நடந்தது. இதன்படி, 9.8 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.22 ஆயிரம் கோடி நிதி நேரடியாக செலுத்தப்படும்.

இதனை தொடர்ந்து, பீகாரின் பாகல்பூர் நகரில் நடந்த அரசியல் பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் மக்களுடைய காலை உணவின் ஒரு பகுதியாக மகானா (அல்லி விதைகள்) இடம் பெற்றுள்ளது.

இது ஒரு சிறந்த உணவாக உள்ளது. அதன் சுகாதார பலன்களை கவனத்தில் கொண்டு, ஆண்டுக்கு 300 நாட்கள் இதனை என்னுடைய உணவின் ஒரு பகுதியாக உட்கொள்கிறேன். இதனை உலக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று கூறினார். அவர் தொடர்ந்து, பீகாரில் மகானா வாரியம் அமைப்பது பற்றி மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இனி உலகம் முழுவதும் அது சென்று சேரும் என கூறினார். நாட்டில் மகானாவை உற்பத்தி செய்வதில் பீகார் பெரும் பங்காற்றி வருகிறது. இதன்படி, 80 சதவீதம் மகானா பீகாரில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், உலகளாவிய தேவையை எதிர்கொள்ள முடியாமல் பீகார் திணறி வருகிறது.

அத்தியாவசிய ஊட்டச்சத்துகளுடன் சரிவிகித உணவாக மகானா உள்ளது. உடல் எடையை பராமரிக்கவும், ரத்த சர்க்கரை அளவை சீராக்கவும் இது உதவுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுவதற்கு முன் மகானாவால் உருவான மாலை ஒன்று அவருக்கு அணிவிக்கப்பட்டது. பீகாரில் நடப்பு ஆண்டின் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

Read Entire Article