தெருவில் பாடிய எட் ஷீரன் - அதிரடியாக தடுத்து நிறுத்திய பெங்களூரு போலீஸ்

3 months ago 13

பெங்களூரு,

'ஷேப் ஆப் யூ', 'பெர்பெக்ட்' உள்ளிட்ட பாடல்கள் மூலம் புகழ்பெற்ற இசைக் கலைஞர் எட் ஷீரன். இவர் சமீபத்தில் சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பரபரப்பான தேவாலய தெருவில், எட் ஷீரன் மைக், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை கொண்டு வந்து பாடல் பாடத் தொடங்கினார். அப்போது அங்கு வந்த போலீசார் எட் ஷீரனிடம் பாடலை நிறுத்துமாறு கூறினர். இருப்பினும் அவர் தொடர்ந்து பாடியதால், ஒரு போலீஸ்காரர் மைக் வயரை பிடுங்கினார்.

இதனால் அங்கு கூடியிருந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள எட் ஷீரன், குறிப்பிட்ட அந்த தெருவில் பாடல் பாடுவதற்கு ஏற்கனவே அனுமதி வாங்கியிருந்ததாகவும், அனுமதியில்லாமல் எதையும் செய்யவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

Read Entire Article