தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் தகவல்

3 months ago 13

சென்னை: தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவி வருகிறது. தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து அடுத்த 2 நாட்களில் புதுவை, வடதமிழ்நாடு, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரம் இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் புதன்கிழமை சென்னை உள்பட 9 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். எனவே, இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதற்கு முன்னதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவா் எஸ். பாலச்சந்திரன் அளித்த பேட்டி: தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் மெல்ல நகா்ந்து அக். 16, 17-ஆகிய தேதிகளில் வடதமிழகம், புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவக்கூடும்.இதற்கிடையே, தமிழக பகுதிகளிலும், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. அதேபோல் அரபிக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஓமன் கடற்கரையை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது. மேலும், இந்திய பகுதிகளிலிருந்து தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலக உள்ளது எனத் தெரிவித்தார்.

The post தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article