தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்; வங்காளதேச அணி அறிவிப்பு

2 months ago 15

டாக்கா,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 29ம் தேதி சட்டோகிராமில் தொடங்குகிறது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதனால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் இடம் பெற்ற தஸ்கின் அகமதுவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மற்றபடி முதல் ஆட்டத்திற்கான அணியில் இடம் பிடித்த வீரர்கள் அப்படியே இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். தஸ்கினுக்கு பதிலாக சையத் காலித் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசை ஷாண்டோ (கேப்டன்), ஷத்மான் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக் ஷோராப், முஷ்பிகுர் ரஹீம், லிட்டன் குமர் தாஸ் (விக்கெட் கீப்பர்), ஜாக்கர் அலி அனிக், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், நயீம் ஹசன், ஹசன் மஹ்மூத் , ஹசன் முராத், சையத் காலித் அகமது.

Read Entire Article