விஜய்யின் "ஜனநாயகன்" படப்பிடிப்பு குறித்து அப்டேட் வெளியிட்ட பிரியாமணி

3 hours ago 1

சென்னை,

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "தி கோட்" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு தற்காலிகமாக 'தளபதி 69' என்று பெயரிடப்பட்டது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படம் விஜய் நடிக்கும் கடைசி படமாகும். இப்படத்தை எச்.வினோத் இயக்க அனிருத் இசையமைக்கிறார். பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது. 'அனிமல் மற்றும் கங்குவா' படத்தில் வில்லனாக நடித்து அசத்திய பாபி தியோல் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படமானது அரசியல் தொடர்பான கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு 'தளபதி 69' படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் பெயரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு 'ஜன நாயகன்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் விஜய் வாகனத்தின் மீது நின்று கொண்டு அவரது ரசிகர்களுடன் செல்பி எடுப்பது போல் காட்சி அமைந்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த பிரியாமணி 'பருத்திவீரன்' படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். அதைத் தொடர்ந்து இவர் மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் என பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போதைய இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர், விஜய் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் ஒரு பேட்டியில் ஜனநாயகன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நடிகை பிரியாமணியிடம் படம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், "நான் விஜய்யின் தீவிர ரசிகை, அவரது காட்சிகளுக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகிவிட்டது. எனக்கும் அவருக்கும் உள்ள காம்பினேஷன் காட்சிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதற்காக மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்" என கூறியுள்ளார்.

Read Entire Article