தூத்துக்குடியில் வாலிபர் மர்ம மரணம்: எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்

3 hours ago 2

தூத்துக்குடி, மறவன்மடம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 35). இவருக்கு அதிக மதுப்பழக்கம் இருந்ததால் ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள மது போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் அங்கு விக்னேஷ் உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனைக்குப் பின் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், அவரது கை உள்ளிட்ட பகுதிகளில் காயம், கயிற்றால் கட்டிய தழும்புகள் இருந்ததாக தெரிவித்தனர். எனினும் விக்னேஷின் உடலை அடக்கம் செய்த உறவினர்கள், அவரது இறப்பில் மர்மம் இருப்பதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது மனைவி பிரேமலதாவுடன் சென்று தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யிடம் மனு அளித்தனர். மேலும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Read Entire Article