விழுப்புரம்: குடும்பத்தகராறில் துப்பாக்கிச்சூடு - மூவர் கவலைக்கிடம்

5 hours ago 1

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வாக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மனைவி லாவண்யா, இவருடைய தாய் பச்சையம்மாள் மற்றும் தம்பி கார்த்திக்குடன் அப்பகுதியில் வசித்து வந்தார். இவர் ஆன்லைனில் ஏர்கன் ஒன்றை வாங்கி உள்ளார்.

இந்த நிலையில் தென்னரசுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அத்திரம் அடைந்த தென்னரசு தான் வைத்திருந்த ஏர்கன்னை எடுத்து அவரது தாய், மனைவி, தம்பி என மூவரையும் சரமாரியாக சுட்டுள்ளார்.

இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் தென்னரசு வீட்டிற்கு விரைந்தனர். அங்கு கீழே விழுந்துகிடந்த அவரது குடும்பத்தினரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தென்னரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article