
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக Prime India Tower மற்றும் பல கம்பெனியின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக செல்போன் மூலம் அறிமுகமாகி Airtel cell Phone 5G டவர் அமைப்பதற்கு இடம் தேவைப்படுவதாக நம்பத்தகுந்த வார்த்தைகளை கூறி, பின்னர் ஆதார், பான் கார்டு மற்றும் இடம் சம்பந்தமான ஆவணங்களை கேட்டு பெற்றுக்கொண்டு டவர் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறி advance payment, document charges, GST, Aadvocate fees, Etc., என பல்வேறு காரணங்களை கூறி வெவ்வேறு வங்கி கணக்குகளை அனுப்பி பணத்தைப் பெற்று மோசடி செய்ய முனையும் குற்றங்கள் தற்போது சைபர் குற்றவாளிகளால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு, இதுபோன்ற சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் உடனடியாக இலவச உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.