தூத்துக்குடி: விபத்தில் இறந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.70 லட்சம் காப்பீட்டு தொகை வழங்கல்

21 hours ago 2

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சேசு ஆல்வின் கடந்த 10.8.2024 அன்று ஆத்தூர் பழைய காயல் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவர் ஸ்பிக்நகர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் போலீஸ் சேலரி பேக்கேஜ் கணக்கில் சம்பளம் பெற்று வந்தார்.

இதனையடுத்து மேற்சொன்ன வங்கி சார்பாக வழங்கப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகை ரூ.70 லட்சத்திற்கான வங்கி வரைவோலையை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று (17.5.2025) மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான், காவலர் சேசு ஆல்வினின் குடும்பத்தாரிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மண்டல மேலாளர் ஆல்வின் மார்ட்டின் ஜோசப், தூத்துக்குடி ஸ்பிக்நகர் வங்கியின் கிளை மேலாளர் ஆகியோர் உடனிருந்தனர். 

Read Entire Article